நேற்று தடையை அறிவித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று அதனை குறைத்து அறிவிப்பு-இதென்ன நாடகமப்பா..?

நேற்று தடையை அறிவித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று அதனை குறைத்து அறிவிப்பு-இதென்ன நாடகமப்பா..?

இலங்கை கிரிக்கெட் அணியின் 3 வீரர்களின் ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்ந்து அவர்களுக்கு போட்டி தடை விதிப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு (Executive Committee ) நேற்று அறிவித்தது.

ஆயினும் விசாரணைகளை மேற்கொண்ட ஒழுக்காற்று குழு (Disciplinary committee) அவர்களது தடையை குறைக்குமாறு விடுத்த பரிந்துரைக்கமைவைவாக் இன்றைய நாளில் தடைக்குறைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது, நேற்றைய நாளில் தடையை அறிவித்துவிட்டு, இன்று குறைப்பது என்பது என்ன நாடகம் என கேள்விகளை தொடுத்துள்ளனர்.

இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் இடம்பெற்ற குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக ஆகியோர் கொரோனா வலயத்தை விட்டு வெளியேறிய நிகழ்வு இடம்பற்றது.

குசல் மெண்டிஸ் சிகரெட் புகைப்பது போன்ற காணொளிகளும் வெளியானதை தொடர்ந்து, இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவர்களுக்கான தடையை அறிவித்துள்ளது.

அதன்படி குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக ஆகியோருக்கு 2 ஆண்டுகள் போட்டி தடையும் டிக்வெல்லவுக்கு 18 மாதங்கள் போட்டி தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தண்டமும் செலுத்த வேண்டும் எனவும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இப்போதைய தடைக்குறைப்பின் அடிப்படையில் இவர்கள் மூவருக்கும் ஓராண்டு மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்தோடு உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாதங்கள் தடை அமுலாகின்றது.

அத்தோடு ஒவ்வொரு வீரரும் தலா 10 மில்லியன் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.