நேற்றைய கால்பந்து போட்டிகளின் முழமையான விபரம்…!

கால்பந்து ரசிகர்களின் பெரு விருப்புக்குரிய தொடர்கள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்க ரசிகர்களும் அது தொடர்பிலான தமது விருப்பத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் கிரிஸ்டல் பேலஸ்,டோட்டன்ஹம்,லிவர்பூல்,ஷெபீல்ட் யுனைடெட் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கிரிஸ்டல் பேலஸ் , ஆஸ்டன் வில்லா ( 3-2 )

டோட்டன்ஹம் , வோல்வ்ஸ்  (2-0 )

வெஸ்ட் ப்ரோம் , லிவர்பூல்  (1-2)

எவெர்ட்டன்  ,ஷெபீல்ட் யுனைடெட்  (0- 1 )
என்று நிறைவுக்கு வந்துள்ளன.

ஸ்பானிய கழகங்களுக்கிடையில் இடம்பெறும் லா லிகா போட்டிகளில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட்,செல்டா  வீகோ,ரியல் சோசியேடட்,வாலென்சியா,வில்லறீயால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

அத்லெட்டிக் பில்பாவோ  , ரியல் மாட்ரிட் (0-1)

அட்லெடிகோ மாட்ரிட் ,ஒசாசுனா ( 2-1 )

பார்சிலோனா  ,செல்டா  வீகோ (1-2 )

ரியல் சோசியேடட்  , ரியல் வல்லடோலிட்  (4-1 )

வாலென்சியா  , ஏய்பர் (4-1 )

வில்லறீயால்  , சேவில்ல (4-0 )
என்று போட்டிகள் நிறைவுக்கு நிறைவுக்கு வந்துள்ளன.