நோ போல் வீசி புதிய சாதனை படைத்த பூம்ரா…!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 391 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கைக்கு அணித்தலைவர் ரூட்டின் 180 ஓட்டங்கள் மிகப்பெரிய துணையாக அமைந்தது.
போட்டியில் 125வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பூம்ரா No Ball அதிகம் வீசி இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்தார்.
ஏற்கனவே ஐசிசி சம்பியன்ஸ் டிராபியின் முக்கியமான கட்டத்தில் No Ball வீசி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருந்த பூம்ரா இன்னும் திருந்தவில்லை என ரசிகர்கள் கருத்திட்டுள்ளனர்.
போட்டியில் குறிப்பாக 125-வது ஓவரில் பூம்ரா மொத்தம் 10 பந்துகளை வீசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
ஒட்டுமொத்தமாக 13 No Ball வீசி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது, ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பிரதான வேகப்பந்து வீச்சாளர் 13 No Ball வீசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.
முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பூம்ராவிற்கு இந்த போட்டியில் இதுவரை எதுவித விக்கட்டும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த No Ball வீசுகின்ற விடயத்தில் பூம்ரா இன்னும் கற்றுக் கொள்ள இருக்கிறது என ரசிகர்களது கருத்துக்கள் அதிகமாக உலா வர ஆரம்பித்துள்ளன.