பகலிரவு டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பும் இங்கிலாந்து; வெற்றியை நெருங்கும் ஆஸி
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
டேவிட் மலான் 80 ரன்னும், கேப்டன் ஜோரூட் 67 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அதன்பின் 237 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 13 ரன்னில் அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்னும், மைக்கேல் நீசர் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து இன்று 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் திணறியது. அதிலும் 55 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.
மைக்கேல் நீசர் 3 ரன்னில் ஆன்டர்சன் பந்திலும், ஹாரிஸ் 23 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்திலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 6 ரன்னில் ராபின்சன் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி டிக்ளர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 448 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்படி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹாசீப் ஹமீத் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் 20 ரன்களில் டேவிட் மாலனும், 34 ரன்களில் ரோரி பர்ன்ஸும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் இன்றைய நாளின் கடைசி ஓவரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 386 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
#ABDH