பங்களாதேஷை பழிக்குப் பழி தீர்த்தது இந்தியா -இளையோர் உலகக்கிண்ணத்தின் அரை இறுதிக்கான நான்கு அணிகளும் தேர்வாகின.

பங்களாதேசை பழிக்குப் பழி தீர்த்தது இந்தியா -இளையோர் உலகக்கிண்ணத்தின் அரை இறுதிக்கான நான்கு அணிகளும் தேர்வாகின.

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வரும் இளையோர் உலகக்கிண்ண போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமையுடன் (29) நிறைவுக்கு வந்துள்ளன .

காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு இப்போது தேர்வாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்றைய நான்காவதும் இறுதியுமான காலிறுதி ஆட்டத்தில் விளையாடின.

கடந்தமுறை இந்தியாவை இறுதிப்போட்டியில் தோற்கடித்து பங்களதேஷ் கிண்ணத்தை சுவீகரித்தது, அதற்குப் பழிக்குப் பழி தீர்த்து உன்று காலிறுதியில் பங்களாதேஷை தோற்கடித்து இந்தியா இளையோர் உலகக் கிண்ண தொடரில் இருந்து அந்த அணியை வெளியேற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதலாவது காலிறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியும் ,2 வது காலிறுதியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று (29) வெற்றி பெற்றுள்ள இந்திய அணி யும் 3வது காலிறுதியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இந்த போட்டியில் 113 பந்துகள் மீதமிருக்க 5 விக்கட்டுக்களால் ஓர் இலகுவான வெற்றியை பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ள சுட்டிக்காட்டத்தக்கது .

உலகக்கிண்ண வரலாற்றில் இந்திய அணி நான்கு கிண்ணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.