பங்களாதேசை பழிதீர்த்தது நியூசிலாந்து- மூன்றாவது போட்டியில் சுழற்பந்து வீச்சை கொண்டு அபார வெற்றி..!
பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிகளுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம்பெற்று வருகிறது.
முதல் போட்டியில் 60 ஓட்டங்களுக்குள் நியூஸிலாந்தை கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, 2-வது போட்டியிலும் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று தொடரை வெல்லும் முனைப்புடன் மூன்றாவது போட்டியில் களமிறங்கியது வங்கதேச அணிக்கு ,நியூசிலாந்து அதிர்ச்சி வைத்தியத்தை பரிசளித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, ஒரு கட்டத்தில் முதல் 4 விக்கெட்டுகளும் மிக விரைவாகவே வீழ்த்தப்பட்டாலும் கூட அதற்குப் பின்னர் பிலன்டல் (30*) , நிக்கோல்ஸ் (36*) ஆகியோர் அற்புதமான 5 வது விக்கெட் இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொடுக்க நியூஸிலாந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 76 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
அஷாஸ் பட்டேல் பதினொரு ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ,எந்த ஆயுதத்தை பயன்படுத்தி இதுவரைக்கும் பங்களாதேஸ் போட்டிகளில் வெற்றி கொண்டிருந்ததோ அதே ஆயுதத்தைக் கொண்டு திருப்பித் தாக்கி இருக்கிறது நியூசிலாந்து .
5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 க்கு 1 என்ற அடிப்படையில் பங்களதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.