பங்களாதேசை வளப்படுத்தும் ஹேரத், அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சியும்- வங்க தேசத்தின் எழுச்சியும், பின்னணியில் ஹேரத்..!
வங்காளதேஷில் நேற்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தை புதிய சுழல்பந்து பயிற்சியாளராக நியமித்து வரலாற்று வெற்றியையும் ஈட்டிக்கொண்டுள்ளது.
இந்த தொடரில் பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஐந்து போட்டிகளிலும் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பங்களாதேஷ் சுழல் பந்துவீச்சாளர்களின் திறமை என்னவென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 58.4 ஓவர்கள் வீசினர். இங்கே அவர்கள் விட்டுக்கொடுத்த ஓட்டங்கள் 337 ஆகும்.
ஓவருக்கு சராசரியாக 5.77 ஆக ஓட்டங்களை விட்டுக்கவடுத்தனர்.பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சு அணி 16.85 என்ற சராசரியை பராமரித்தது.
இதனுடன், போட்டி தொடரில் 4-1 என வெற்றி பெற பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர்கள் அளித்த பங்களிப்பும மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். நேற்றைய இறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆஸ்திரேலியா 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இது வரலாற்றில் ஒரு டுவென்டி -20 போட்டியில் அவர்களது குறைந்த ஸ்கோராகும்.
வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசனும் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இலங்கையின் ரங்கன ஹேரத் இந்த பங்களாதேஷ் ஸ்பின்னர்களுக்குப் பின்னால் இருக்கிறார் என்பதோடு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் என்பது புலனாகிறது.
அடுத்தடுத்து வரவிருக்கும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களில் அவருடைய ஆலோசனை தொடர்ந்து வெற்றிகரமாக இருக்கும் எனும் நம்பிக்கயுடன் நாம் எதிர்பார்த்து காத்திருக்கலாம்.