பங்களாதேஷில் குசல் பெரேராவின் அணியை தோற்கடித்தது குசல் மெண்டிஸ் அணி..! (படங்கள் இணைப்பு)

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 23 ம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கை வீரர்கள் தமக்கிடையே 40 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடினர், குசல் பெரேரா ஒரு அணிக்கும், மற்றைய போட்டிக்கு குசல் மெண்டீசும் தலைவர்களாக ஆடினர்.

இந்த போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் ஆடிய குசல் மென்டிஸ் தலைமையிலான அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 284/5 ஓட்டங்களை பெற்றது,
டிக்கவெல்ல 88*, பத்தும் நிஸ்ஸங்க 2, குசல் மெண்டிஸ் 69, தனஞ்சய டீ சில்வா 25, சமிக்க கருணாரத்ன 35, ரமேஷ் மெண்டிஸ் 2, பினுரா பெர்னாண்டோ 21*, L சந்தகன் 27* ஓட்டங்களைக் குவித்தனர்.

பந்துவீச்சில் தனுஷ்க குணாதிலக 1/26,
அஷித பெர்னாண்டோ 1/27,
உதான 1/40,
ஹசரங்க 1/43 ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

பதிலுக்கு ஆடிய குசல பெரேராவின் அணி 37.2 ஓவர்களில் 282 சகல விக்கெட்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் குணத்திலக 17, குசல் பெரேரா 28, வாணிந்து ஹசரங்க 79, தசுன் ஷானக 1, அசேன் பண்டார 80*, உசுரு உதான 47, அகில தனஞ்சய 5, S பெர்னாமாடோ 2, ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக்க கருணாரத்ன- 3/40,
பினுரா பெர்னாண்டோ -1/43,
துஷ்மந்த சமீர -1/45,
ரமேஷ் மெண்டிஸ் -1/57,
L சந்தகன் -1/59 என்று ஜொலித்தனர்.