பங்களாதேஷில் பாதுகாப்பாக தடம்பதித்தது இலங்கை அணி!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.

சற்று முன்னர் பங்களாதேஷ் பங்கபந்து சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பாதுகாப்பாக சற்றுமுன்னர் தரையிறங்கியதாக ஶ்ரீலங்கா தகவல் வெளியிட்டுள்ளது.

தலைமைத்துவ மாற்றங்களோடு சிரேஷ்ட வீரர்களை அணியில் இருந்து கழற்றி விட்டு ,இளம் அணியினருடனே புறப்பட்டு சென்றிருக்கிறது இலங்கை அணி.

குசல் பெரேராவின் தலைமைத்துவத்தில் மூன்று போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.  மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணி பாதுகாப்பாக தாயகம் திரும்ப வாழ்த்துவோம் பிராத்திப்போம் ?