இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை எடுத்திருக்கிறது நியூசிலாந்து.
யங் 54
லாதம் 186*
கான்வே 99*
மூன்று பாஸ்ட் பவுலர் ஒரு ஸ்பின்னரோடு டாஸ் வென்று பவுலிங் என்று முதல் டெஸ்டில் ஜெயித்த கெத்தோடு உள்ளே வந்த பங்களாதேசிற்கு ஆரம்பத்தில் இருந்தே லாதம் கொட்டிக்கொண்டே இருக்க, யங் தன் மெதுவான பேட்டிங் மூலம் இராஜதந்திரமாய் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.
கொட்டு, சமாதானம், கொட்டு, சமாதானம் என்று தொடர்ந்த நியூசி ஓபனர்கள் இருவரும் அரைசதமடிக்க பார்ட்னர்ஷிப் 150யை நெருங்கிய வேளையில், யங் கான்வேயை அனுப்பி வைப்பதிற்காக 54 ரன்களோடு பெவிலியன் கிளம்பிவிட்டார்.
பங்களாதேஷ் பவுலர்கள் அதுதான் இன்றைய நாளோட அவர்களோட கடைசி கொண்டாட்டம்னு தெரியாம கொண்டாட, கான்வோ வந்து கொட்டு, சமாதானம் முறையை கொட்டு, கொட்டு, கொட்டு என்று மாற்றியமைக்க, அனுபவமற்ற பங்களாதேஷ் அணியினர் “அண்ணே போன ஆட்டத்துல நல்லாதான அவுட் ஆனிங்க இப்ப ஏன் மோசமா ஆடறிங்க?”னு பார்க்க, “மொத்த அண்ணனுங்களும் ஒருக்கா தோத்துப் பாத்தம்டா என் சிப்சு”னு ரெண்டு பேரும் மண்டை வீங்க வீங்க கழுத்துலலாம் கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
லாதம் நூறு, கான்வோ ஐம்பதுனு ஆக்ஸிலேட்டரை அமுக்க, பங்களாதேஷ் வீரர்கள் எரிபொருள் குறைய ஆரம்பிக்கிறது. ஒருவழியா ரெண்டுபேரும் கொட்டு கொட்டு கொட்டு கொட்டுனு கொட்டி முடிச்சாங்க மேல இருக்க ரன்ஸோட.
ஆனாலும் பங்களாதேஷ் ப்ளேயர்ஸ் சந்தோசப்படற விசயம் ஒன்னு இந்த மேட்ச்ல இருக்கு. இத அவங்ககிட்டதான் சொல்ல முடியல உங்கக்கிட்டயாவது சொல்றன். அதாவது அவங்க கான்வோவ இன்னைக்கு நூறு அடிக்க விடல. வெற்றிக்கரமா ஒருநாள் ஒத்தி போட்டிருக்காங்க.
அப்புறம் முதல் டெஸ்ட்ல பங்களாதேஷ் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டாய் ஒரு பவுலர் தம்பி எபாடட் ஹூசைன்னு இருந்தாப்லல்ல. அவர் நிலவரத்த கீழ போடறன் பாருங்க.
21 ஓவர் வீசி 1 மெய்டன் பண்ணி 1 விக்கெட்டும் எடுக்காம 5.42 எகானமியோட 114 ரன்கள் தந்திருக்காரு தம்பி பவுலரு.
நான் ரிடையர்ட் ஆகற மேட்ச்ல அந்த பவுலர் தம்பிக்கிட்ட இருந்து ஒரு சென்சுரி வேணும்னு கேட்டிருப்பான் போல ராஸ் டெய்லர். அந்தத் தம்பிய மட்டும் தனியா வைச்சி கவனிச்சிருக்கானுங்க இரக்கமில்லாம.
கடைசியா 80 ஓவர் முடிஞ்சி ரெண்டாவது புது பந்த பங்களாதேஷ் வாங்கறப்ப பெவிலியன்ல டெய்லரோட லுக்கு “டே என் கடைசி மேட்ச்ல நைட் வாட்ச்மேனாவாது ஆடவிடுங்கடா”ங்கற மாதிரிதான் இருந்துச்சு.
நம்ம பவுலர் தம்பி ஹூசைன் வீசின முதல் ஓவர்ல லாதமுக்கு ரெண்டு lbw அப்பீல், ரெண்டுக்குமே அம்பயர் அவுட் குடுத்துட்டாரு. ஆனா ரிவீவ்ல பந்து ஸ்டம்ப் மேல சில இன்ஞ்சஸ்ல படல.
உலகில் இன்னைக்கு நாளோட ரொம்ப அதிர்ஷ்டமற்ற மனிதன் நம்ம பவுலர் தம்பிதான்!
Richards