பங்களாதேஷ் அணியை கிண்டலடிக்கும் மஹேல மற்றும் அமித் மிஸ்ரா…!

ஆசியக் கிண்ணப் போட்டியின் B குழுவின் கீழ் நேற்றுப் போட்டியிட்ட பங்களாதேஷ் அணி, இவ்வருட போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை குறைத்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. போட்டிக்கு முன்பே இரு தரப்பு கருத்துக்களும் சமூக வலைதளங்களில் சூடு பிடித்தது. வார்த்தை பரிமாற்றத்தால் இலங்கை வங்கதேச போட்டி பனிப்போரை உருவாக்கியது.

2018 சுதந்திரக் கிண்ணத் தொடரில் இருந்து ஆசியாவில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதும் போட்டிகள் இந்திய-பாகிஸ்தான் மோதலுக்கு அடுத்தபடியாக பரபரப்பான உணர்வை ஏற்படுத்துபவை.

இருப்பினும் நேற்று இலங்கை அணியிடம் வங்கதேசம் தோல்வியடைந்ததையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மிகவும் நகைச்சுவையாக ஒரு குறிப்பை பதிவிட்டு, “பிரபலமான நாகின் நடனத்தை பார்க்க அனுமதிக்கப்படாததற்கு வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“ இந்த வெற்றி ஆசிய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். ஒரு இளம் அணி மிகவும் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் பிரபலமான நாகின் நடனத்தை பார்க்க அனுமதிக்கப்படாதது வருத்தமளிக்கிறது,” என்று அமித் மிஸ்ரா அங்கு கூறினார்.

இதேநேரம் இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்ற கருத்தை ஏற்கனவே முன்வைத்திருந்த பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் காலித் மசூத்தின் கருத்தை மஹேலவைம் நாசூக்காக சாடியுள்ளார்.

அவரது பதிவில் உலகத் தரம் (world class performance)  வாய்ந்த வெற்றி என பாராட்டியுள்ளார்.

 

பங்களாதேஷ் தரப்பு முன்னர் தெரிவித்த கருத்து கீழே ?

 

எமது YouTube தளத்துக்கு செல்ல ?