பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் உபாதை புதியவர் சேர்ப்பு..!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் உபாதை புதியவர் சேர்ப்பு..!

 உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்று வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சைபுதீன் உபாதை அடைந்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .

இவரது உபாதை காரணமாக இவரால் உலகக்கிண்ணப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணத்தால் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் பங்களாதேஷல கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது, இதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழு அனுமதி அளித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது .

ஏற்கனவே நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பேரகுசன் க்கு பதிலாக அடம் மில்ன் சேர்க்கப்பட்டார், இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் சுழற்பந்து வீச்சாளர் பவியன் அலனுக்கு பதிலாக  அஹீல் ஹொசைன் உபாதை மாற்றீடாக அணியில் சேர்க்கப்பட்டமை கவனிக்கத்தக்கது.

Ferguson