பங்காரை துடுப்பாட்ட பயிற்சியாளராக அழைத்த கோஹ்லி…!

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்ட சஞ்சய் பங்காருக்கு மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி கிடைத்துள்ளது.

2019 உலக கிண்ண அரை இறுதி போட்டிக்கு பின்னர் அந்த பதவியிலிருந்து பங்கார் நீக்கப்பட்டிருந்தார்.

இப்போதைய நிலையில் கோஹ்லி தலைமையிலான IPL ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பாங்கார் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி, டீ வில்லியர்ஸ் இருவரையும் விட்டால் துடுப்பாட்டத்தில் துணைபுரியாத RCB அணிக்கு, பங்காரின் பங்களிப்பு எப்படி அமையும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.