பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான தமிழக வீரரைத் தேடிப்போகும் தலைமைத்துவம்..!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான தமிழக வீரரைத் தேடிப்போகும் தலைமைத்துவம்..!

தமிழகத்தின் இளம் சகலதுறை ஆட்டக்காரரான ஷாருக்கான் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Punjab Kings) அணியில் அறிமுகமாகி இருந்தார்.

5.25 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் பெறப்பட்டிருந்த ஷாருக்கான், இந்த அறிமுக ஐபிஎல் தொடரிலேயே அதிரடியில் கலக்கி கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானவர்களுடைய கவனத்தை ஈற்றிருந்தார்.

தினேஷ் கார்த்திக் தலைமையில் சையது முஷ்டாக் அலி இருபதுக்கு-20 தொடரின் கிண்ணம் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த ஷாருக்கானை, இம்முறை ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் வளைத்துப் போட்டது.

இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) போட்டிகளில் கோவை கிங்ஸ் அணியின் தலைவராக இளம் சகலதுறை ஆட்டக்காரர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லண்டனை தளமாகக் கொண்டியங்கும் லைகா நிறுவனம் இந்த கோவை கிங்ஸ் அணியின் உரிமையாளர்களாக இருக்கும் நிலையில் தனக்கான தலைமைத்துவ அழைப்பு மகிழ்வழிப்பதாக ஷாருக்கான்  தெரிவித்தார்.