பதவி விலகிய இலங்கை கால்பந்து அணியின் தலைவர்..!

இலங்கை கால்பந்து போட்டிக்கான ஃபிஃபாவின் தடை நீக்கப்பட்டதையடுத்து, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த கால மற்றும் தற்போதைய நிர்வாகங்கள் வீரர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் ஓய்வு பெறும் வரை ஒரு வீரராக தனது சேவைகள் இருக்கும் என்றும், வீரர்களைப் பாதுகாக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் தனது முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்றும் சுஜன் மேலும் கூறினார்.