பநிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்த மஹேல- ஏன் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்த்தனேவை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணியை ஏற்க தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் படி, மஹேல ஜெயவர்த்தன பல காரணங்களை கூறி இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்கு பல ஐபிஎல் பட்டங்களுக்கு வழிகாட்டிய ஜெயவர்த்தன, இலங்கை அணி மற்றும் ஐபிஎல் போன்ற பிரான்சைஸ் அணிகளுக்கு பயிற்சியளிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஒரு இந்திய பயிற்சியாளர் வேறு எந்த கிரிக்கெட் பொறுப்பையும் ஏற்க முடியாது, ஏனெனில் புதிய பிசிசிஐ அரசியலமைப்பு எந்த ஒரு நபரும் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க அனுமதிக்காது என்பதகயும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

2021 டி 20 உலகக் கோப்பை முடிந்த பிறகு தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சாஸ்திரியை மாற்றக்கூடிய நபரைத் தேடுகிறது.

ஐபிஎல் போட்டிக்கு பிறகு மஹேல ஜெயவர்த்தனா தன்னார்வ அடிப்படையில் இலங்கை யு -19 அணிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க மஹேல ஜெயவர்தன மறுத்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

எவ்வாறாயினும் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராகும் வாய்ப்பு அனில் கும்ப்ளே மற்றும் லக்ஸ்மன் ஆகியோருக்கு இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி குடும்பத்தாரோடு நேரத்தை செலவு செய்ய முடியாத காரணத்தால், இனியும் முழுநேரமாக பயிற்சியாளர் பொறுப்பை வகிக்க முடியாது எனவும் மஹேல ஜெயவர்தன முன்னர் ஒரு தடவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு காணொளி இணைப்பு ?