பந்துவீச்சில் 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடையை நீக்குங்கள்.. ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை

பந்துவீச்சில் 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடையை நீக்குங்கள்.. ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் முகமது சமி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விக்கெட் என அபாரமாக பந்து வீசி வருகிறார். இந்த சூழலில் துபாய் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது.

மேலும் வெப்பமும் கடுமையாக நிலவுகிறது. இதுபோன்ற சூழலில் பவுலர்களால் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்.ஆனால் இந்த தொடரில் எந்த வீரரும் பெரிய அளவு துபாயில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யவில்லை.

குறிப்பாக ஷமிக்கு ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு முக்கிய ஆயுதமாக உள்ள நிலையில் தற்போது தங்களால் ஏன் அந்த வகை பந்துகளை வீச முடியவில்லை என்பது குறித்து சமி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர்,” நாங்கள் துபாயில் விளையாடும் போது பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முயற்சி செய்கிறோம்.

ஆனால் பந்தில் எச்சில் தடவாமல் உங்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாது. நாங்கள் ஐசிசியிடம் தொடர்ந்து எச்சிலை பந்தில் தடவ அனுமதி கொடுங்கள் என்று கூறி வருகிறோம்.பந்து மட்டும் ரிவர்ஸ் ஆனால் நிச்சயம் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்” என்று சமி கூறியுள்ளார்.

மேலும் பேசிய சமி தாம் தனது பழைய பந்துவீச்சு பார்மை மீட்டு கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும் அணியின் வெற்றிக்காக தமது பங்களிப்பை கொடுப்பதை என்னுடைய கடமை என்றும் சமி கூறியுள்ளார். மேலும் அணியின் இரண்டு முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இல்லாத போது தான் அதிக பொறுப்பை ஏற்றுக் கொண்டு விளையாட வேண்டும்” என்றும் சமி கூறியுள்ளார்.

அணியின் ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளராக இருப்பதால் தமக்கு பணிச்சுமை அதிகமாக தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ள சமி எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து வீச்சுக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் சமி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுப்பதற்காக ஐசிசி வந்தில் எச்சில் தடவ அதை தடை செய்தது. தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் அந்த தடையை நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற கலையே இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Previous articleCT இறுதிப் போட்டியில் இந்தியா..!
Next articleசுனில் சேத்ரி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.