பந்துவீச்சு மட்டுமல்ல துடுப்பாட்டத்திலும் நம்ம அன்டேர்சன் கில்லிதான்- சர்வதேச கிரிக்கட்டில் படைத்திருக்கும் புதிய உலக சாதனை ..!
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டேர்சன் சர்வதேச கிரிக்கெட் உலகில் இப்போது இருக்கும் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்நு வருகின்றார்.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் ஜேம்ஸ் அன்டேர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது தடவையாக ஆட்டமிழக்காது இருந்து புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ,இதுவரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவைகள் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனையை முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்கள் இருந் வோல்ஷ் வசமிருந்தது.
அதற்கு அடுத்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஆட்டம் அதிக தடவை ஆட்டம் இழக்காதிருந்த ( Not out) இருந்த வீரர் என்ற பெருமையை சந்தர்போல் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று உலகின் முதல் வீரராக நூறாவது தடவையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற பெருமையைப் அன்டேர்சன் பெற்றிருக்கிறார் .
இது மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்தமான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தடவைகள் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் முன்னாள் வீர்ர் தோனி வசம் இருக்கிறது.
மொத்தம் 142 தடவைகள் ஒட்டுமொத்தமான கிரிக்கெட் எல்லாவற்றிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார், அந்த சாதனையையும் அண்டர்சன் (146 தடவைகள்) கடந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.