பந்து வீச்சுப் பயிற்சியாளராகும் ரங்கன ஹேரத்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான ரங்கான ஹேரத் , பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக திகழும் முன்னாள் நியூசிலாந்து அணியின் தலைவரும் சுழல் பந்து வீச்சாளருமான டானியல் வெட்டோரிக்கு பதிலாகவே ஹேரத் நியமிக்கப்படவுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அக்ரம் கான் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக டானியல் வெட்டோரியால் பங்களாதேஷ் அணியுடன் பயணித்து பயிற்சிகளை வழங்க முடியாத நிலையில் உள்ளுரை சேர்ந்த சோஹில் இஸ்லாம் , இலங்கை அணிக்கெதிரான போட்டிகளில் பயிற்சியாளராக திகழ்ந்தார்.

இந்தநிலையிலேயே நீண்ட கால அடிப்படையில் ஹேரத்தின் நியமனம் அமையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.