பந்தை சேதப்டுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான இங்கிலாந்து வீரர்கள்- லோர்ட்ஸில் சம்மவம்..!

பந்தை சேதப்டுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான இங்கிலாந்து வீரர்கள்- லோர்ட்ஸில் சம்மவம்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக. கொண்டிருந்த போது இங்கிலாந்து வீரர்கள் அணிந்திருந்த காலணி (Spikes) கொண்டு பந்தை சேதப்படுத்த முற்பட்டதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

சமூக வலைதளங்களில் அதிகமான பேசுபொருளாக இந்தவிடயம் மாறி இருக்கிறது .

ஆயினும் இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட எந்த விடயங்களும் இல்லை என்றாலும் இந்த மாதிரியான பந்தை சேதப்படுத்துகின்ற ஏதோவொரு முயற்சியை இங்கிலாந்து வீரர்கள் முன்னெடுத்தார்கள் என்பது புலனாகிறது.

அடுத்தடுத்து வரவுள்ள நாட்களில் இது தொடர்பான விடயங்கள் தெளிவு படுத்தப்படும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.

வீடியோ இணைப்பு