பந்தை சேதப்படுத்திய விவகாரம், புதுவிதமான ஆலோசனை -மைக்கல் வோகன் ..!

அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்துவதை விடுத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள் என்று இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான மைக்கல் வோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2018 ம் ஆண்டு அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஜோஹன்னேர்ஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியிருந்தனர்.

இதனால் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உதவி தலைவர் வோர்னர் ஆகியோருக்கு ஓராண்டு போட்டி தடையும், பந்தை சேதப்படுத்திய இளம் வீரர் கமரூன் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் போட்டி தடையும் விதிக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

இப்போதைய நிலையில் இளம் வீரர் கமரூன் பான்கிராப்ட், ஒரு பேட்டியின்போது இந்த விவகாரத்தில் பந்து வீச்சாளருக்கும் சம்பந்தம் இருப்பதான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்து பேசுபொருளாகியுள்ள நிலையில், அதனை விடுத்து முன்கொண்டு செல்ல வேண்டும் எனும் கோரிக்கையை மைக்கல் வோகன் விடுத்துள்ளார்.