பயிற்சிகளில் இலங்கையின் லெஜெண்ட்ஸ் அணி…! -(அட்டவணை & புகைப்படங்கள்)

இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு T20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ராய்ப்பூர் சென்றுள்ள இலங்கையின் லெஜெண்ட்ஸ் அணி பயிற்சிகளை ஆரம்பித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டில்ஷான் தலைமையில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் சனத் ஜெயசூரிய , ஆர்னோல்ட், தம்மிக்க பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை லெஜெண்ட்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளது.