பயிற்சிப் போட்டியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி லோகேஷ் ராகுல் சதம் ..!

பயிற்சிப் போட்டியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி லோகேஷ் ராகுல் சதம் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய அணி விளையாடிய ஒற்றை பயிற்சி போட்டி இன்று(22) நிறைவுக்கு வந்துள்ளது.

டேர்ஹாம் பிராந்தியத்தில் கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மூன்றாவது நாளில் வெற்றி தோல்வி அற்ற நிலையில் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

விராட் கோலி, ரஹானே, பான்ட், இஷாந்த் சர்மா, அஸ்வின்,ஷாமி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட காரணத்தால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த போட்டிகளில் பங்கேற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 311 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, லோகேஷ் ராகுல் அற்புதமான சதத்தை பூர்த்தி செய்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 220/9 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் பெற்றபோது ஆட்டத்தை நிறுத்தியது.

ஜடேஜா (51), விஹாரி (43), அகர்வால் (47), புஜாரா (38) ஓட்டங்கள் சேர்த்தனர்.

268 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விக்கட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி வெற்றி தோல்வியற்று நிறைைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் லோகேஷ் ராகுல் ஜடேஜா, உமேஷ் யாதவ் ,சிராஜ் ஆகியோர் சிறப்பாக ஜொலித்தமை குறிப்பிடத்தக்கது.