பயிற்சியாளராக முதல் தொடரிலேயே தன்னை நிரூபித்துக் காட்டிய ஹேரத்- இதெல்லாம் எங்க இலங்கை கிரிக்கெட்டுக்கு புரியும்..?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்த ரங்கன ஹேரத் அண்மையில் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் நியூசிலாந்து அணியின் தலைவரான டானியல் வெட்டோரிக்கு பதிலாகவே ஹேரத் நியமனம் ஆகியிருந்தார்.
அவரது நியமனத்தில் பின் இடம்பெறும் முதல் தொடரான சிம்பாவே அணிக்கெதிரான தொடரில் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஹேரத்.
அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் இருவரும் இணைந்து 9 விக்கெட்டுக்களை அள்ளியுள்ளனர், மஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களையும், சாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
ஹேரத்தின் பயிற்றுவிப்புக்கு பின்னர் பங்களாதேஷ் சுழல் பந்து வீச்சாளர்கள் இருவரும் சிம்பாவே டெஸ்ட்டில் அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் திறமையான பலரை பயன்படுத்த தவறிவருவதாகவும் ரசிகர்கள் பலர் தமது வருத்தங்களை தெரிவித்துள்ளனர்.