பயிற்சியாளரோடு முறுகல் நிலையில் மெஸ்ஸி- எதிர்காலம் கேள்விக்குறியாகாதா என கவலைப்படும் ரசிகர்கள்..!

பயிற்சியாளரோடு முறுகல் நிலையில் மெஸ்ஸி- எதிர்காலம் கேள்விக்குறியாகாதா என கவலைப்படும் ரசிகர்கள்..!

கால்பந்து உலகின் பிரபலமான கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்தில் இருந்து மாற்றலாகி பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்காக விளையாடி வருகிறார்.

பிரான்சில் இடம்பெற்று வருகின்ற லீக் 1 கால்பந்தாட்ட போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் PSG அணி இறுதி நேர கோலால் 2-1 என வென்றது.

இந்தநிலையில் போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸியை ஆடுகளத்துக்கு வெளியில் எடுத்து, இன்னும் ஒரு வீரரை அனுப்புவதற்கான முடிவை பயிற்சியாளர் மேற்கொண்டார்.

ஹக்கிமி எனப்படும் பிரபலமான வீரர் மெஸ்ஸிகக்கு பதிலாக உள்ளனுப்பும் முடிவை PSG அணியின் பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோ மேற்கொண்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியில் வருகின்றபோது, பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோக்கு கைலாகு கொடுக்காமல் விறைத்த முகத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த பயிற்சியாளர்  மொரிசியோ போச்செட்டினோ ,எங்களிடம் தரமான ஏராளம் வீரர்கள் இருக்கிறார்கள். மெஸ்ஸியை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது, இதன் காரணத்தால் தான் நாங்கள் மெஸ்ஸியை ஆடுகளத்திற்கு வெளியில் எடுத்து அவரை பாதுகாத்ததாக கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும் ஒரு அணியின் முகாமையாளர், பயிற்சியாளருடன் இவ்வாறு முறுகல் நிலையை கடைப்பிடிப்பது என்பது மெஸ்ஸியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆட்டங்களில் விளையாடிய மெஸ்ஸி எதுவித கோல்களையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.