பயிற்சியாளர் குழாம், தேர்வாளர் குழாம்  ஏகப்பட்ட இளம் வீரர்கள் பலத்தோடும் இலங்கையை தாக்க படையெடுக்கும் டிராவிட் …!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.

இந்திய தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நிலையில், இந்தியாவின் இரண்டாம் தர அணி ஷிகார் தவான் தலைமையில் இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொள்ளவிருக்கிறது.

 அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணி, ஷிகார் தவான் தலைமையிலான இந்தியாவை தோற்கடிக்குமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெருவாரியாக இருக்கிறது.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் டிராவிட் வழிகாட்டலில் கடந்தாண்டு இளையோர் உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட பரஷ் மாம்ரே பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

இது மாத்திரமல்லாமல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் குழாத்தில் ஏராளமான பயிற்சியாளர்கள் உள்ளடக்கப்பட்டமை சிறப்பம்சமாக இருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் இலங்கைக்கான சுற்றுலா மேற்கொள்ளும் இந்த அணியில் இந்தியில் தேர்வாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமையும் சிறப்பம்சமாக இருக்கிறது.

தவான் தலைமையில் இளம் வீரர்கள், டிராவிட் பயிற்சியில் பயிற்சியாளர் குழாம் அது மாத்திரமல்லாமல்  ஏராளமான இளம் வீர்ர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை நசுக்க டிராவிட் வழிகாட்டலில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அணி இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில்தான் வெற்றியும் சார்ந்திருக்கிறது.