14வது ஐபிஎல் தொடரின் 14வது போட்டி சற்று முன்னர் சென்னை மற்றும் கல்கத்தா அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்துள்ளது .
இந்த போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது .
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது ,ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பிளசிஸ் 95 ஓட்டங்கள் பெற்றார். 221 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 31 ஓட்டங்களை மட்டும் பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .
ஆயினும் அதன் பின்னர் வந்த ரசல், தினேஷ் கார்த்திக்,கம்மின்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ,ஒருகட்டத்தில் வெல்லமுடியாத போட்டி என்று கணிக்கப்பட்ட இந்த போட்டியை இறுதிவரைக்கும் சுவாரஸ்யமான முறையில் இட்டுச் சென்றார்கள் கொல்கத்தாவின் துடுப்பாட்டக்காரர்கள்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது, சாம் கரானின ஒரே ஓவரில் கம்மின்ஸ் 30 ஓட்டங்களை இன்று விளாசியமையும் குறிப்பிடத்தக்கது.