பரா ஒலிம்பிக் போட்டி களத்தின் நடுவே நடைபெற்ற லவ் ப்ரோபோசல் -தீயாய் பரவும் காணொளி ..!

பரா ஒலிம்பிக் போட்டி களத்தின் நடுவே நடைபெற்ற லவ் ப்ரோபோசல் -தீயாய் பரவும் காணொளி ..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சுவாரசிய காதல் கதை ஒன்று அரங்கேறியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கேப் வேர்டே நாட்டை பிரதிநிதித்துவம் செய்து போட்டியில் பங்கெடுத்த  கியூலா நிட்ரியா பெரீரா செமெடோ எனும் வீராங்கனைக்கு, அவருடைய போட்டி வழிகாட்டி (Guide) காதல் செய்த சம்பவம் ஒன்று பதிவானது.

T11 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்த வீராங்கனைக்கே காதல் வலை வீசப்பட்டது.

பார்வை குறைபாடு இருந்த காரணத்தால் அந்த போட்டி எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்றால், பார்வை குறைபாடுடையவரை கையில் பிடித்து கொண்டு (Guide) ஓட வேண்டும் என்பது தான் போட்டி விதி முறையாகும்.

ஆகவே ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு உதவியாளர் (Guide) இருப்பார், இந்த போட்டியில் பங்கெடுத்த கேப் வேர்டே எனும் ஆபிரிக்க நாட்டின் சார்பில் போட்டியில் பங்கெடுத்த கியூலா நிட்ரியா பெரேரா செமெடோ எனும் வீீீீராங்கனையின் உதவியாளராக இருந்த Manuel vaz de veiga என்பவரே போட்டி நிறைவுக்கு வந்த பின்னர் அந்த பெண்ணிடம் லவ் ப்ரொபோஸ் செய்த அருமையான காட்சி சமூக ஊடகங்களில் பரவியிருக்கிறது.

குறித்து போட்டியின் அரையிறுதி போட்டியில் அந்த வீராங்கனை தோல்வியைத் தழுவி இருந்தாலும், பரா ஒலிம்பிக் போட்டியின் நடுவில் நடந்த காதல் களத்தில் குறித்த வீராங்கனை ஜெயித்திருக்கிறார்.

ஒலிம்பிக் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் ஒரு சுவாரசிய காதல் கதையாக இந்த காதல் கதை இருக்கிறது.

வீடியோ இணைப்பு ???