பல்துறை ஆற்றல் உடையவர்களாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள்…!

பல்துறை ஆற்றல் உடையவர்களாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள்…!

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் வீர, வீராங்கனைகள் முன்னைய காலத்தில் பல்வேறு துறைகளில் ஆற்றல் மிகுந்தவர்களாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெஸ்ஸல்வூட் பாடசாலைக் காலத்தில் ஈட்டி எறிதலில் திறமையை காண்பித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரமான ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் போட்டிகளில் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தி வரும் ஒருவராக இருந்திருக்கிறார்.

அதேபோன்று மெக் லென்னிங் , எலிசா பேரி ஆகியோர் மிகச் சிறந்த ஹொக்கி, மற்றும் கால்பந்து வீராங்கனைகளாக திகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஆரம்ப காலத்தில் வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தினாலும், இப்போதைய நிலையில் அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிகளில் அங்கம் வகித்து தம் ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hazlewood Smith Perry Meg lenninng