பல கிரிக்கெட் வரலாறுகளை தாங்கி நிற்கும் மார்ச் 18
கிரிக்கெட் ரசிகர்கள் இன்றைய நாளில் சில பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை மீட்டி பார்ப்பது வழமை. அவ்வாறான பல வரலாறுகளை சுமந்து நிற்கிறது இன்றைய நாள்.
2015 மார்ச் 18 : மஹேல சங்கா இறுதி ஒரு நாள் போட்டி
இன்றைய நாளில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான 2015 உலக கோப்பை காலிறுதி போட்டி இடம்பெற்றுள்ளது. இப் போட்டியே இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான சங்கா மற்றும் மஹேல இன் இறுதி ஒரு நாள் போட்டியாகும்.
2012 மார்ச் 18 : சச்சின் இன் இறுதி ஒரு நாள் போட்டி
கிரிக்கெட் இன் கடவுள் என கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினம் 2012 ஆம் ஆண்டு தனது இறுதி ஒரு நாள் போட்டியில் விளையாடினார். 2012 ஆசியா கிண்ண போட்டியில் சச்சின் 52 ஓட்டங்களைப் பெற்று தனது ஒரு நாள் போட்டிகளின் பயணத்தை முடித்து கொண்டார். இதே தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அவர் தனது 100 ஆவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.
இதே போட்டியில் 330 ஓட்டங்களை துரத்தி துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு இளம் விராட் கோஹ்லி 183 என்னும் இந்திய அணித்தலைமைக்கான ஓட்ட எண்ணிக்கையை விளாசி அசத்தி இருந்தார்.
2018 மார்ச் 18 : டினேஷ் கார்த்திக் இறுதி பந்தில் சிக்சர்
2018 Nidahas Trophy இறுதி போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இறுதி இரு ஓவர்களில் 34 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று இறுதி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை தேடி கொடுத்தார்.