பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சுற்றுப் பயணத்தின்போது அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், தன்னுடைய தாயகம் திரும்பி பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பழனி முருகன் ஆலயத்திற்கு இன்று சென்ற நடராஜன் தன்னுடைய முடியை காணிக்கையாக்கி மொட்டையடித்து தன்னுடைய நேர்த்தி கடனை செலுத்தி உள்ளார் .

ஆஸ்திரேலிய மண்ணில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன், இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அடுக்கடுக்கான அதிர்ஷ்டத்தை தனதாக்கினார் .

அவரது கடின உழைப்பின் பலனாக T20 போட்டிகளில் அறிமுகமாகி ,ஒருநாள் போட்டிகளில் அஅறிமுகமாகும் மேற்கொண்டு பின்னர் டெஸ்ட் அறிமுகத்தையும் மேற்கொண்டார் .

நடராஜனது திடீர் வளற்சி கிரிக்கெட் அரங்கில் பலருக்கும் ஆச்சரியத்தை மட்டுமல்லாது மிகப்பெரிய வரவேற்பையும் ஏற்படுத்தியது.

நடராஜனின் கிரிக்கட் அறிமுகத்திற்குப் பின்னர் அவருடைய நேர்த்திக்கடனை இந்து முறைப்படி இன்று பழனி முருகனுக்செகு லுத்தியிருக்கிறார் .

நடராஜனின் வெற்றிப்பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.