பஹார் சமான் புதிய சாதனை…!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப வீரரான பஹார் சமான் இன்றைய தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது ஒருநாள் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இன்றைய போட்டியில் பெற்றுக்கொண்ட சதம் மூலம் பஹார் சாமான் ஆரம்ப வீரராக 2000 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டு, 50 க்கும் உயர்வான சராசரியை எட்டியுள்ளார் .

முன்னதாக இந்த பட்டியலில் ரோஹித் சர்மா ,ஜோன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோர் இந்த சாதனை நிலைநாட்டிய நிலையில், புதிதாக பஹார் சமான் இணைந்துள்ளார்.

கடந்த போட்டியில் 193 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் முறைமூலம் ஆட்டமிழந்த இவர், இன்று பெற்றுக்கொண்ட சதத்தின் துணையுடன் தொடரில் 302 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய 3 வது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 வி௯க்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

#SAvPAK