இங்கிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுலா – புதிய தலைவர் நியமனம்..!

வரலாற்று சிறப்புமிக்க பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆல்ரவுண்டர் மொயீன் அலி தலைமை தாங்குவார் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

விவரங்களின்படி, இங்கிலாந்தின் முழுநேர white ball கேப்டன் ஜோஸ் பட்லர் அடுத்த மாதம் தொடங்கும் பயணத்திற்கு உடல்தகுதிக்காக போராடுகிறார். மேலும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கில் பாகிஸ்தானில் நடக்கும் ஏழு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் பிற்பகுதியிலேயே இணையவுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணக் குழு செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தானுக்கு செல்கிறது ,2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூத்த இங்கிலாந்து ஆண்கள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த குளிர்காலத்தில் பாகிஸ்தானில் இரண்டு டி20 போட்டிகளை விளையாட இங்கிலாந்து ஒப்புக்கொண்டது, ஆனால் அநாமதேய மரண அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தின் முந்தைய வருகை இடைநடுவே கைவிடப்பட்டதால் இங்கிலாந்தும் சுற்றுலா மேற்கொள்ளவில்லை.

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து ஏழு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

செப்டம்பர் 20, 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கராச்சியில் போட்டிகள் நடைபெறும், மீதமுள்ள மூன்று போட்டிகள் செப்டம்பர் 28 மற்றும் 30 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் லாகூர் நடைபெறும்.

T20 உலக கோப்பை போட்டிகளுக்கு பின்னர் ராவல்பிண்டி (டிசம்பர் 1-5), முல்தான் (டிசம்பர் 9-13) மற்றும் கராச்சியில் (டிசம்பர் 17-21) ஆகிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக நவம்பர் இறுதியில் இங்கிலாந்து மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.