பாகிஸ்தானில் இடம்பெறும் T20 போட்டிகளில் பாபர் அசாம் சாதனை..!
பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் நேஷனல் T20 கிண்ணம் என அழைக்கப்படுகின்ற T20 போட்டி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாம் இன்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டிகளில் இன்று சதம் அடித்ததன் மூலம் T20 போட்டிகளில் அதிக சதம் அடித்த பாகிஸ்தானியர் என்ற பெருமையை அவர் தனதாக்கினார்.
இது மாத்திரமல்லாமல் ஆசிய நாட்டவர்களில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மா (6) வினுடைய சாதனையையும் இன்று சமப்படுத்தினார்.
இன்று பாபர் பெற்றுக்கொண்டது ஆறாவது T20 சதமாக பதியப்பட்டது, இந்த நோர்தேர்ன், மத்திய பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாபர் அசாம் பெற்றுக்கொண்ட சதத்தின் துணையோடு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மத்திய பஞ்சாப் அணி 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
201 எனும் இலக்குடன் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நோர்த்தேர்ன் அணிக்கு குட்டி பாபர் அசாம் என அழைக்கப்படும் ஹைதர் அலி ஆட்டம் இழக்காது 91 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க, மிக இலகுவாக இந்த போட்டியில் நோர்தேர்ன் அணி வெற்றியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சதம் அடித்தும் பாபர் அசாமின் மத்திய பஞ்சாப் அணி தோல்வியை தழுவிக் கொண்டது.