பாகிஸ்தானில் விளையாட ஆஸி அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?

நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டியை கொண்ட கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

போட்டித் தொடர் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த போதிலும், அது தற்போது லாஹூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானின் உள்விவகார அமைச்சு இன்று (18) அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்ற நிலையில், சுமார் கால் ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.