பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலா, முழுமையான அட்டவணையை அறிவித்தது ஆஸ்திரேலியா, 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளடக்கம் ..!
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான பலரும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற கிரிக்கெட் சுற்றுலா வருகின்ற மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டித் தொடருக்கான அட்டவணையை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், ஒற்றை டுவென்டி 20 போட்டிகள் கொண்டதாக ஓர் முழுமையான தொடராக இந்த தொடர் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறிப்பாக பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு அணிகள் தயக்கம் காட்டும் நிலையில் ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையான போட்டிகளையும் கொண்ட ஒரு முழுமையான தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளமை ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தியுள்ளது .
அட்டவணை இணைப்பு ?