பாகிஸ்தானை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. அம்பானி செய்த ஒரு மூவ்.. நோட்டீஸ் அனுப்பும் பாக். வாரியம்
உலகின் மிக பிரசித்தி பெற்ற டி20 தொடர் என்றால் அது ஐபிஎல் தான். ஐபிஎல் தொடர் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருமானம் தருகிறது. இந்த சூழலில் பிசிசிஐ க்கு போட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக பிஎஸ்எல் தொடரை ஐபிஎல் போட்டி நடைபெறும் அதே நேரத்தில் நடத்துகிறது.
இதன் மூலம் ஐபிஎல் க்கு போட்டியாக தங்களது தொடரை மாற்றலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தேர்வாகாத பல வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 25 ஆம் தொடர் வரை நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டம் ஏப்ரல் 11 முதல் மார்ச் 18 வரை நடைபெறுகிறது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டரான கார்பினை பெஷ்வார் அணி தேர்வு செய்தது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த லீசாத் வில்லியம்ஸ் என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டது .
அவருக்கு பதிலாக psl தொடரில் தேர்வாகி இருந்த கார்பீனை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி தூக்கியது. மும்பை இந்தியன்ஸ் வழங்கும் பணத்திற்கு அதன் 10 சதவீதம் கூட பி எஸ் எல் தொடரில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு லீம் தொடரில் விளையாட ஒப்பந்தமான நிலையில் எப்படி ஐபிஎல் தொடருக்கு செல்லலாம் என்று கடுப்பாகி வருகிறது.
இது குறித்து தற்போது கார்பீனுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில், எங்கள் பி எஸ் எல் தொடரில் விளையாட ஒப்பந்தமான நிலையில் தற்போது அதிலிருந்து விலகி வேறு அணிக்கு விளையாட போகிறேன் என்று கூறுவது சரி கிடையாது. இது தொழில் முறை கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல.
இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிபி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வல்லுனர்கள், ஐபிஎல் தொடருக்கு போட்டியாக நாங்கள் பிஎஸ்என்எல் தொடரை நடத்தவில்லை. மாறாக எஸ் ஏ டி 20 பி பி எல் ஐ எல் டி டி 20 என பல தொடர்கள் பிப்ரவரி மார்ச் மாதம் நடைபெற்றது.
இதனால் எங்கள் தொடருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் நாங்கள் ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தினோம் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது ஐபிஎல் தொடரில் பல வீரர்களுக்கு காயம் ஏற்படும் நிலையில் பிஎஸ்எல் தொடரில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவராக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.