பாகிஸ்தானை சந்திக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு..!

பாகிஸ்தானை சந்திக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு..! 

நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை தங்கள் ஒருநாள் அணியை அறிவித்துள்ளன.

ஜாய்டன் சீல்ஸ், ஷெர்மன் லூயிஸ் மற்றும் கீசி கார்டி ஆகியோர் புதுமுக வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜேசன் ஹோல்டர் ஓய்வில் உள்ளார் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் மகப்பேறு விடுப்பில் உள்ளார்.

விபரம்.

மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவராக செயற்பட்ட கிரின் பொல்லார்ட் அண்மையில் ஓய்வு அறிவித்து அணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதன் அடிப்படையில் புதிய அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிக்கோலஸ் பூரான்  தலையிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.