பாகிஸ்தானை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 16 .5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை பெற்றுக் கொண்டது.
ஆட்டநாயகன் விருது பிரிட்டோரியஸ்க்கு கிடைத்தது.

இதன் மூலம் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.