சிம்பாவேக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாவே அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பாகிஸ்தான் அணியைப் பதற வைத்த சிம்பாவே அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் களம்கண்டது.
முதலில் ஆடிய சிம்பாவே அணி 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. 119 எனும் இலகுவான இலக்குடன் களம்கண்ட பாகிஸ்தான் அணிக்கு 16 வது ஓவர் வரையில் அணித்தலைவர் பாபர் அசாம் களத்தில் நின்றாலும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ளது.
25 பந்துகளில் 41 எனும் ஓட்டங்கள் தேவையான நிலையில் பாபர் அசாம் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒவ்வொரு வீரராக நடையைக் கட்டினர்.
இறுதியில் சிம்பாவே அணி 19 ஓட்டங்களை வித்தியாசத்தில் வென்று அசத்தியது, இப்போது தொடர் 1-1 என்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.