பாகிஸ்தான் அணிக்கு உதவ தயார்.. யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அறிவிப்பு.. வசீம் அக்ரம் மீது சாடல்

பாகிஸ்தான் அணிக்கு உதவ தயார்.. யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அறிவிப்பு.. வசீம் அக்ரம் மீது சாடல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி மிகப் பெரிய தோல்வியை தழுவியது. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது.

இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியை பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து திட்டி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அணியில் உள்ள பயிற்சியாளர், கேப்டன் என அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், பாகிஸ்தான் அணிக்கு உதவ முன்வந்துள்ளார். யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் சிங் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் ஆறு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.யோக்ராஜ் சிங் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி குறித்து அவர் விமர்சிக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வசீம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கிரிக்கெட் வர்ணனையில் அமர்ந்து பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் எல்லாம் தங்கள் நாட்டிற்கு சென்று பயிற்சி முகாம்களை நடத்தி அங்கு உள்ள வீரர்களுக்கு உதவ வேண்டும்.”

“பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்ல உங்களில் யார் இந்த நடவடிக்கையை செய்யப் போகிறீர்கள்? யார் பாகிஸ்தான் அணியை மீண்டும் சாம்பியன் ஆக்கப் போகிறீர்கள் என்பதை நான் பார்க்க வேண்டும். இல்லை என்றால் நான் செல்கின்றேன். என்னிடம் பாகிஸ்தான் அணியை கொடுங்கள்.”

“ஒரு ஆண்டில் புதிய அணியை கட்டமைத்து வெற்றி பெற வைக்கின்றேன்.அதன் பிறகு இதை நீங்கள் தொடர்ந்து ஞாபகம் வைத்துக் கொள்வீர்கள்” என்று யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் தந்தையான யோக்ராஜ் சிங் தனியாக கிரிக்கெட் அகாடமி ஒன்று நடத்தி வருகிறார். இதில் அர்ஜூன் டெண்டுல்கர் போன்ற வீரர்களுக்கு எல்லாம் அவர் பயிற்சி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவேகமான 1000 ரன்கள்..!
Next article5 நாளில் 3 மேட்ச் ரத்து.