பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் நிகழ்த்திய புதிய சாதனை ..!
பாகிஸ்தானுக்கான சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவைஸ்ரேலிய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான T20 போட்டி நிறைவுக்குவந்த்து.
ஏற்கனவே 3 ஒருநாள் போட்டிகள் 3 டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒற்றை T20 இடம்பெற்றது ,இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாமுக்கு 200 ஆவது சர்வதேச ஆட்டமாக அமைந்திருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்காக இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் துடுப்பாட்டத்தில் 66 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது .
ஒரு நாள் ,டெஸ்ட் ,T20 என்று தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணிக்காக இந்த ஆஸ்திரேலிய தொடரில் பாபர் அசாம் ஓட்ட மழை பொழிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த போட்டியில் 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை தனதாக்கியது.