பாகிஸ்தான் அணித் தலைவரின் சகலதுறை ஆற்றலில் அபார வெற்றி பெற்றது ,இலங்கை அணி ஏமாற்றம்..!

பாகிஸ்தான் அணித் தலைவரின் சகலதுறை ஆற்றலில் அபார வெற்றி பெற்றது ,இலங்கை அணி ஏமாற்றம்..!

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது .

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் காசிம் அக்ரமினுடைய சகலதுறை ஆற்றல் வெளிப்பாட்டின் காரணமாக 108 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது.

போட்டியில் முதல் மூன்று வீரர்களும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் 365 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது ,பாகிஸ்தான் அணியில் அணித்தலைவர் காசிம் அக்ரம் 65 பந்துகளில் சதம் அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிகவேக சதம் எனும் உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதேபோன்று ஹாசிபுல்லாவும் பாகிஸ்தான் சார்பில் சதமடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது, இது தொடரின் இவரது 2 வது சதமாகும். இலங்கை பந்துவீச்சாளர்களால் பாகிஸ்தான் வீரர்களை கட்டுப்படுத்த முடியாதுபோனமை முக்கியமானது.

366 எனும் இமாலய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ரான்புல் அரைச்சதம் அடித்தார், அணித்தலைவர் வெல்லலகே 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்மூலமாக பாகிஸ்தான் 238 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது, இலங்கை அணி 6-வது இடத்தைப் பெற்றுக் கொண்டு இளையோர் உலக கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணித் தலைவர் காசிம் அக்ரம் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 80 பந்துகளில் 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார் .

உலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடித்து 5 விக்கெட்டுகளை சாய்த்த அரிய சாதனையை காசிம் அக்ரம் படைத்ததோடு, பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாகி ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.