பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறாரா அன்டி பிளவர் ?

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறாரா அன்டி பிளவர் ?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அண்டி பிளவர் நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளிவந்து இருந்தாலும் அதனை அண்டி பிளவர் நிராகரித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவருமான அண்டி பிளவர், தான் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

குறிப்பாக அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டுவென்டி டுவென்டி தொடரின் போது இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர்வூட்டுக்கு ஓய்வு கொடுக்கப்படட அண்டி பிளவர் அணியின் பயிற்சி பணிகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தற்போதைய தலைமை பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக்கிற்கு பதிலாக ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரை PCB தேடி கொண்டிருக்கிறது.

அதனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அண்டி பிளவர் அதனை நிராகரித்திருப்பதாக அறியக்கிடைக்கிறது.

ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகளை பயிற்றுவிப்பதை விரும்புவதாகவும் தேசிய அணியின் பயிற்சியாளராக செயலாற்ற விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் முல்தான் சுல்தான் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் செயின்ட் லூசியா அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளவர் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் சில வருடங்கள் கடமையாற்றியமையும் கவனிக்கத்தக்கது.

எது எவ்வாறாயினும் மிஷ்பாவின்  பதவிக்காலம் உலக டுவென்டி டுவென்டி போட்டிகள் வரை தொடரும் என்றும் அதன் பின்னர் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்கப்படுகிறது.

அதிகமாக பிளவருக்கு பதிலாக ஹரி கேர்ஸ்டன் இணைக்கப்படவும் வாய்புள்ளது.