பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க அசாம் கான் செய்த தியாகம் என்ன தெரியுமா- அடடா என்னவொரு அர்ப்பணிப்பு…!

பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மொயின் கானின் மகன் அசாம் கான், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தானின் T20 அணியில் இடம் பெற்றுள்ளார்.

22 வயதான அசாம் கான், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியான சிறப்பு பெறுதிகள் மூலமாக தேர்வாளர்களின் கவனிப்பில் இருந்தார், ஆனால் அவரது அதிக எடை கொண்ட உடல் அமைப்பு தேர்வாளர்களை தயக்கம் காட்டச்செய்தது.

T20 போட்டிகள் வேகமான வடிவம், மற்றும் வீரர்கள் விரைவாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேர்வாளர்கள் அசாம் கானின் 130 KG உடல் எடையைக் குறைக்க பணித்தார்கள்.

கான் கடுமையாக உழைத்து சுமார் 30 KG எடையைக் குறைத்துக் கொண்டார். இதன் விளைவாக T20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பாக்கிஸ்தான் சூப்பர் லீக் உட்பட 36 உள்நாட்டு ஆட்டங்களில் 157 என்ற ஸ்ட்ரைக் ரேடில் கடுமையாக அதிரடி காட்டியவர் அசாம் கான்.
அசாம் கான் ட்விட்டரிலும் தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இப்போது நம்பமுடியாத உணர்வு. நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எந்தவொரு தொழில்முறை விளையாட்டு வீரரின் இறுதி குறிக்கோள். எனது பயணம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திய எனது ஆதரவாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடினமாக உழைத்து பெரியதாக கனவு காணுங்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று அசாம் கான் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் கான் இலங்கையின் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் அவரது தகப்பனார் பயிற்சியாளராக இருந்த காலி கிளாடியேட்ட்ர்ஸ் அணியில் அதிரடி காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த பருவகாலத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதற்கான டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளுக்கான அணிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டி அணி விபரம்.

பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (உதவி தலைவர்), அப்துல்லா சாபிக் , பாஹீம் அஷ்ரப் , பஹார் சமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், ஹாரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முஹம்மத் ஹஸ்னைன், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), சல்மான் அலி ஆகா , சர்பரஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), சவுத் ஷகீல், ஷாஹீன் ஷா அப்ரிடி , உஸ்மான் காதிர் .

T20 அணி விபரம்.

பாபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான் (உதவி தலைவர்), அர்ஷத் இக்பால், அசாம் கான், பாஹீம் அஷ்ரப், பஹார் சாமான்,ஹைதர் அலி , ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாட் வாசிம், மொஹம்மட் ஹபீஸ் , மொஹம்மட் ஹஸ்னைன், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), மொஹம்மட் வாசிம் Jnr , சர்பராஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷர்ஜீல் கான் ,உஸ்மான் காதிர் .

டெஸ்ட் அணி விபரம்.

பாபர் அசாம் (தலைவர்), மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர் ) (உதவி தலைவர்), அப்துல்லா ஷாபிக், அபிட் அலி, அசார் அலி, பாஹீம் அஷ்ரப், பாவாட் அலாம் ,ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இம்ரான் பட் , மொஹம்மட் அப்பாஸ், மொஹம்மட் நவாஸ், நசீம் ஷா, நளமன் அலி, சஜித் கான், சர்ப்பரஸ் அஹமெட் (விக்கெட் காப்பாளர்), சவுத் ஷகீல் , ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷஹனவாஸ் தஹானி, யாசிர் ஷா ,சாஹித் மஹ்மூத்

இங்கிலாந்து தொடர்.

8 ஜூலை – 1வது ODI, சோபியா கார்டன்ஸ், கார்டிப்

10 ஜூலை – 2வது ODI, லோர்ட்ஸ் , லண்டன்

13 ஜூலை – 3வது ODI, எட்க்பாஸ்டன் , பர்மிங்காம்

16 ஜூலை – 1வதுT20, ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம்

18 ஜூலை – 2வது T20, ஹெட்டிங்கிலே , லீட்ஸ்

20 ஜூலை – 3வது T20, ஓல்ட் டிராபோர்ட , மான்செஸ்டர்

மேற்கிந்திய தீவுகள் தொடர்.

27 ஜூலை – 1 வது T20, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்

28 ஜூலை – 2 வது T20, கென்சிங்டன் ஓவல் , பார்படாஸ்

31 ஜூலை – 3 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

1 ஆகஸ்ட் – 4 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

3 ஆகஸ்ட் – 5 வது T20, ப்ரொவிடென்ஸ் ஸ்டேடியம், கயானா

6-7 ஆகஸ்ட் – 2 நாள் பயிற்சி ஆட்டம்.

12-16 ஆகஸ்ட் – 1 வது டெஸ்ட் , சபீனா பார்க் , ஜமைக்கா

20-24 ஆகஸ்ட் – 2 வது டெஸ்ட், சபீனா பார்க் , ஜமைக்கா