பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி..!

சிம்பாவேக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாவே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருப்பது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

ஹராரே மைதானத்தில் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 150 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களம் புகுந்த சிம்பாவே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்று 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.