பாகிஸ்தான் அணி அபார வெற்றியுடன்  தொடரை சமன் செய்தது- சாஹீன் அஃப்ரிடி அசத்தல் பந்துவீச்சு ..!

பாகிஸ்தான் அணி அபார வெற்றியுடன்  தொடரை சமன் செய்தது- சாஹீன் அஃப்ரிடி அசத்தல் பந்துவீச்சு ..!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

முதலாவது போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்தபோதும் இறுதி விக்கட்டை கையில் வைத்துக்கொண்டு அற்புதமான வெற்றியை மேற்கிந்திய தீவுகள் பெற்றது.

 

அதன்பின்னர் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் களம்கண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 302 ஓட்டங்களையும், பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் 150 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை நிறுத்தி, 329 எனும் வெற்றி இலக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருகின்ற போது மேற்கிந்திய தீவுகள் 49 ஓட்டங்களை பெற்று 1 விக்கட் இழந்திருந்தது.

இறுதி நாளான நேற்று மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு 280 ஓட்டங்கள்  மேலதிகமாக தேவைப்பட்டது, ஆனாலும் ஷஹீன் ஷா அஃப்ரிடி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதை போன்று இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் பாகிஸ்தான் 1-1 என சமப்படுத்தியது, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடிக்கு கிடைத்தது.