பாகிஸ்தான், அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் வரும் திடீர் மாற்றம்…!
பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது, மூன்றாவது போட்டி லாஹூர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் மட்டுப்படுத்தப்பட்டு போட்டிகள் கொண்ட தொடரில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் ராவல்பிண்டியில் திட்டமிடப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கானா போட்டி அட்டவணை திடீரென சில காரணங்களுக்காக லாகூருக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இந்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் புதிய அ்அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளமெ குறிப்பிடத்தக்கது.