பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் பதவி விலகல்- புதியவர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை..!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் பதவி விலகல்- புதியவர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட மிஷ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வாகார் யூனிஸ் ஆகியோர் இன்று உடனடியாக தங்கள் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் .

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிஷ்பாவிற்கு, மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் அடுத்து செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக வாகார் யூனிஸ் அல்லது சக்லைன் முஷ்டாக் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையிலேயே இன்று மிஷ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வாகார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கதுு.

இவர்கள் பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, சக்லைன் முஷ்டாக் மற்றும் அப்துல் ரசாக் ஆகிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குறித்த பதவிகளில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறியப்படுகிறது.