பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பேசுபொருளாக இருக்கும் சொயிப் மாலிக்கின் மருமகன்-மிகப்பெரிய சாதனை …!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பேசுபொருளாக இருக்கும் சொயிப் மாலிக்கின் மருமகன்-மிகப்பெரிய சாதனை …!

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் பிரபல பாகிஸ்தானிய வீரரான சொயிப் மாலிக்கின் மருமகன் மொஹமட் ஹுரைரா மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 340 பந்துகளில் ஆட்டமிழக்காது 310 ஓட்டங்களை விளாசினார், 40 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கலாக இந்த சாதனையை படைத்தார் .

19வயதும் 239 நாட்களும் கொண்ட இவர், இந்த அறிமுக சீசனில் இதுவரை மூன்று சதங்களை விளாசி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பேசுபொருளாக இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் முச்சதம் அடித்த 2 வது வீரர் என்ற சாதனையையும் அவருக்குச் சொந்தமானது .

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் துடுப்பாட்ட சாயலை பின்பற்றும் இவர், பாபர் அசாம் போன்று வரவேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என குறிப்பிட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி உள்ளிட்டவர்களுடன் விளையாடிய ஹுரைரா, தன்னுடைய மாமனார் மாலிக் தனது கிரிக்கெட் வாழ்வின் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் தெரிவித்துள்ளார்.